இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நவராத்திரிவிழா பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (ஒக்.09) பாராளுமன்றத்தில் வெகு விமரிசையாகக்கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களும்இணைந்துகொண்டார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் அனுசரணையுடன், புத்தசாசன, சமயமற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள்திணைக்களம் இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து இந்த விழாவைஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.