வட மாகாண இடமாற்ற பட்டியலை ஏற்கமாட்டோம் – இலங்கை ஆசிரியர் சங்கம்!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊடக அறிக்கை 08.10.2025

இலங்கை ஆசிரியர் சங்கம்

தற்போது வடமாகாண கல்வி திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளசேவையின் தேவை கருதிய இடமாற்ற சபையை அரசியல் தலையீடு காரணமாகஇலங்கை ஆசிரியர் சங்கம் புறக்கணித்திருந்தது.

இந்நிலையில் குறித்த இடமாற்றப் பட்டியல் இலங்கை ஆசிரியர் சங்கத்தின்பிரசன்னம் இன்றி வெளியிடப்பட்டுள்ளது.

சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற பெயரில் ஆசிரியர்கள்பழிவாங்கப்பட்டுள்ளனர்.

ஏலவே வெளிமாவட்ட சேவையையும், வெளிமாவட்ட சேவையை ஒத்தசேவையையும் தமது சேவை நிபந்தனை காலத்துக்கு மேலதிகமாகவும் பூர்த்திசெய்துள்ள பலரது பெயர்கள்  இடமாற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இது தற்செயலாகவோ தவறுதலாகவோ இடம்பெற்ற விடயமல்ல.

பதில் வடமாகாண கல்வி பணிப்பாளராக இருந்து தற்போது மேலதிக மாகாணகல்விப்பணிப்பாளராக பணியாற்றும் பிரட்லி என்னும் அதிகாரியின் வடமாகாணகல்வியை குழப்பும் செயற்பாடே இதுவாகும்.

குறிப்பிட்ட  ஆசிரியர் சங்கமொன்றின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்குள் நின்றுகொண்டு வேண்டுமென்றே பழிவாங்கும் முகமாக, வெளிமாவட்டசேவைகளையும் அதற்கொத்த சேவைகளையும் பூர்த்திசெய்தோரும் குறித்தஇடமாற்ற பட்டியல்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அரசியல் நிகழ்ச்சி நிரலில் நடைபெற்ற குறித்த இடமாற்றங்கள்நிறுத்தப்படவேண்டும்.

குறித்த இடமாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுடனான தொழிற்சங்கசெயற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள கிளீன் பீல்ட்விளையாட்டு கழக மண்டபத்தில் நடைபெறும்.

ஆ.தீபன் திலீசன்

உப தலைவர்,

இலங்கை ஆசிரியர் சங்கம்,

Share this Article