பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வரும் 32 அதிகாரிகள்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்ற உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில் இந்த இடமாற்றம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் இந்த இடமாற்ற உத்தரவுபிறப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக இவ்வாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்செய்யப்படுவதற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில்வெளியிடப்படவில்லை.