புதிய கல்விச் சீர்திருத்தத்தால் ஆசிரியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – பிரதமர் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புதிய கல்விச் சீர்திருத்தங்களால் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதுஎன பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள்குறித்த பட்டறையில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

21ஆம் நூற்றாண்டை எதிர்கொள்ளக்கூடிய முழுமையான அறிவைக் கொண்டஒரு பிள்ளையை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்த செயல்முறையின்நோக்கம்.

பாரம்பரிய கல்வி முறைக்கு பதிலாக, மாணவர்களுக்கு அழுத்தமில்லாத கற்றல்சூழலை உருவாக்கி, அவர்கள் விரும்பும் துறைகளைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டும்வகையில் சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும்கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணிஅமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கல்வி அதிகாரிகளிடம் கூடசரியான புரிதல் இல்லை என கல்வித் தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர்உலபனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புதிய கல்விசீர்திருத்தங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் தீர்மானங்கள்எடுக்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

Share this Article