யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடம் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு அமையச் செயற்பட்டு, சீனக் கடல் அட்டைப் பண்ணைகளுக்குஆதரவளிப்பதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுதமிழ் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று (ஒக்.05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியஅவர், “கடல் அட்டைப் பண்ணைகள் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதுகுறித்து ஆராய்ச்சி செய்யுமாறு கடந்த இரண்டு ஆண்டுகளாகப்பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை விடுத்தும், அதற்கு அவர்கள்செவிசாய்க்கவில்லை,” என்று குறிப்பிட்டார்.

சிறு மீனவர்கள் புறக்கணிப்பு?
மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடம்கவலை கொள்வதில்லை என்று சுட்டிக்காட்டிய அன்னராசா, “கடல் வளங்கள்அழிகின்றன என்று மீனவர்கள் சுட்டிக்காட்டும் போது மௌனம் காத்தபல்கலைக்கழகம், கடந்த மாதம் திடீரென கடல் அட்டையைப் பாதுகாக்கவேண்டும் என்ற அடிப்படையில் கடற்றொழில் திணைக்களங்களுடன் சேர்ந்துஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளது.”
“ஆனால், இந்தக் கூட்டத்திற்கு பாதிக்கப்பட்ட சிறு மீனவர்கள்அழைக்கப்படவில்லை. இது யாருக்கான கலந்துரையாடல்?” என அவர் கேள்விஎழுப்பினார்.
கதிரைக்காக விஞ்ஞான ஆய்வு?
மேலும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பல்கலைக்கழகம்செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், “தமிழ் மக்களின் கைகளில்உள்ள கடற்பரப்பையும் கடற்றொழிலாளர்களையும் அழிக்கின்றஅரசாங்கங்களின் கீழ் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் பீடமும்செயல்படுகின்றதா? பதவியில் இருப்பவர்கள் தமது கதிரைகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் என்று கூறிக்கொண்டு, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றனர்,” எனக் கடுமையாகவிமர்சித்தார்.