எல்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு- யாருக்கும் பாதிப்பு இல்லை!!! ​

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எல்பிட்டிய ஒமத்தாப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ​நேற்று இரவு (ஒக். 04) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரேஇந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

​இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை எனப்பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இருப்பினும் வீட்டின் ஒரு கண்ணாடி யன்னல் சேதமடைந்துள்ளது.

​வீட்டு உரிமையாளர் அப்பகுதியில் உள்ள போதைப்பொருள் தொடர்பானசெயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்தமைக்கானபழிவாங்கலாக இத்தாக்குதல் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

​தாக்குதலுக்கான உண்மையான நோக்கம் இன்னும் வெளியாகவில்லை. எல்பிட்டிய பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article