இலங்கையில் WhatsApp மோசடி அதிகரிப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையில்  WhatsApp   மோசடி ஹேக்கிங்  முறைப்பாடுகள்அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவின் பாதுகாப்புஅதிகாரி சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்யும் குழுக்கள்மூலம் பெறும் தகவல்கள் அதிகளவிலான மோசடி செய்யப்படுவதாக சாருகாதமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.

“உங்களுக்குத் தெரியாத குழுக்களில் சேருவதன் மூலம் இந்த நிலைமைஏற்படலாம். மிகக் குறைந்த விலையில் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை விற்பனைசெய்வதாக கூறி முன்கூட்டியே பணம் வசூலிக்கப்படும் மோசடி சம்பவங்கள்அதிகரித்துள்ளன.

ஒன்லைனில் ஒரு கூட்டத்தில் சேர Zoom இணைப்பு வழியாக குறியீட்டைப்பெறுவது என்ற போர்வையில் WhatsApp கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாதஅணுகல் இடம்பெறுகின்றது.

மோசடி தொடர்பான தொலைபேசி எண்கள் அல்லது பரிவர்த்தனைகளின்நகல்கள் இருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் விரைவில்முறைப்பாடு செய்ய வேண்டும் என இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவுபாதுகாப்பு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article