யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப்பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்துவடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2025 நேற்று (ஒக். 03) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


யாழ் புனித யுவானியர் தேவாலய முற்றலில் இருந்து விருந்தினர்கள் அழைப்புடன் கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி மாவட்டச் செயலகத்தினைவந்தடைந்ததனைத் தொடர்ந்து செயலகம் கேட்போர் கூடத்தில் பண்பாட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.


மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவரும் அரசாங்க அதிபருமான மருதலிங்கம்பிரதீபன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட ஓய்வு நிலை அரசாங்க அதிபர் திருவாட்டிஇமெல்டா சுகுமாா் அவர்களும் அவர் தம் துணைவர் திரு. கே. சுகுமாா்அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழககலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ரகுராம் அவர்களும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்சன் அவர்களும், கெளரவ விருந்தினராக அளவெட்டி நாதஸ்வர கலாநிதிஇரத்தினவேல் கேதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
இந் நிகழ்வின் வரவேற்புரையானது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன்அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கானபண்பாட்டுப் பெரு விழா இடம்பெற்றதுடன் அரங்கத்திறப்புரை கலாநிதி தே. தேவானந் அவர்களால் ஆற்றப்பட்டதுடன், இவ் விழா பல்வேறுபட்ட கலைஇலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.