தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்று தற்போதுநிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளைமுன்வைத்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை பல்கலைக்கழகஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தோடு இணைந்து ஒரு நாள் அடையாளப்போராட்டத்தை இன்று (செப்.30) முன்னெடுத்தனர்.
யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து முன்னெடுக்கப்பட்டகுறித்த அடையாளப் போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியது.
பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம்முன்னெடுக்கப்பட்டது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பல்கலையின் ஆசிரியர் சங்கதலைவர் கலாநிதி விக்னேஸ்வரன் –
“இன்றைய அரசின் கல்வி அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களோடு எமதுபிரச்சினைகள் குறித்து பலசுற்றுப் பேச்சுக்களை நடத்தி, தீர்வை வழங்க அவர்கள்இணங்கவில்லை.
தீர்வுகளை நடைமுறைபடுத்துவதில் காலதாமதம் அல்லது இழுத்தடிப்பு நிலைஇருந்துவருவதால், அதற்கு எமது எதிர்ப்பை வெளிக்கொணரும் வகையிலும், தீர்வை விரைவுபடுத்தக் கோரியுமே இந்த போராட்டத்தை நாம்முன்னெடுக்கின்றோம்.
அரசு தற்போது கொண்டுவந்துள்ள சம்பள சீரமைப்பில் பல்கலைக்கழகஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது.
அதேபோன்று கொரோனா உள்ளிட்ட பல அனர்த்தங்களால் பல்கலைக்கழகத்தின்உட்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
மாணவர் அனுமதிப்பும் அதிகரித்துள்ளதால் மாணவர்களை உரிய ஆராய்சி முறையிலான கற்பிதங்களை செய்வதில் பல நெருக்கடிகள் இருக்கின்றன.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகளுக்கு தரம் மிக்கபாடாலைகளில் முதலாம் தரத்தில் இணைப்பதற்கான சலுகைகள் வழங்கப்பட்டுவந்தது. அதை இந்த அரசு நிறுத்தியுள்ளது.
விரிவுரையாளர்கள் பலர் வெளி நாடுகளுக்கு சென்றுள்ளமையால் அவர்களதுவெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை இன்றைய அரசுஎடுக்காதுள்ளதால் விரிவுரையாளர்கள் கடும் சுமைகளுக்குளாகியுள்ளனர். அத்துடன் மாணவர்கள் கூடுதலான கற்றலை மேற்கொள்ள குறிப்பாகஆராச்சிகளை முன்னெடுக்க முடியாதிருக்கின்றது.
கல்வி மறுசீரமைப்பை இந்த அரசு முன்னெடுக்கின்றது. இந்த நடவடிக்கையின்போது உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாது மேற்கொள்ளப்படுகின்றது என எமதுதாய்ச்சங்கம் சுட்டிக்காட்டிய போதும் அது தொடர்பில் அரசு அக்கறைகொள்ளாதிருக்கின்றது.
இவ்வாறான பல பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வரும் நிலையில் அரசுடன்போச்சுக்களை நடத்தி தீர்வை எட்டியிருந்தோம்.
ஆனால் அந்த தீர்வை நடைமுறைப்படுத்த அரசு பின்னடிக்கின்ற நிலைகாணப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வை விரைவுபடுத்தும் நோக்கிலேயேஇந்த ஒரு நாள் அடையாள போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே நாட்டின் முதுகெலும்பான பல்கலைக்கழக கட்டமைப்பை வலுப்படுத்தஅரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்” – என்றார்.