திறமையான அரச சேவையின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்யமுடியும் -பிரதமர்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மக்களுக்காக அர்ப்பணிப்பும், வினைத்திறனும் மிக்க அரச சேவையினைப்பெற்றுக் கொடுப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்திச் செய்யும் பணியில்இணைந்து கொள்ளுங்கள்.

புதிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய அறிவுரை.

இன்று (செப்.29) அலரி மாளிகையில் நடைபெற்ற புதிய முகாமைத்துவ சேவைஉத்தியோகத்தர்களுக்கு நியமன கடிதம் வழங்கும் நிகழ்வில் பிரதமர் இதனைத்தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்..

மக்களுக்கு உகந்த சேவையை வழங்கும், சுயாதீனமான, திறமையான அரசசேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், மக்களுக்காகஅர்ப்பணிப்புமிக்க திறமையான அரச சேவையினைப் பெற்றுக் கொடுப்பதன்மூலம் நாட்டை அபிவிருத்திச் செய்யும் பணியில் இணைந்து கொள்ளுமாறும்பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

முகாமைத்துவ சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்தபோட்டிப் பரீட்சையில் தெரிவாகி நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட1890 விண்ணப்பதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று(செப். 29) அலரி மாளிகையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article