யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தில், ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், மேலும் ஆறு சிரேஷ்ட விரிவுரையாளர்களை பேராசிரியர்களாகவும் பதவி உயர்த்த பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பேரவைக் கூட்டம் நேற்று (செப்.27) சனிக்கிழமை, துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நெறிமுறைகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர்களின் திறன் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக்கு முன்வைக்கப்பட்டன.
அதன்படி,
-
விவசாய பீடம் – விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த ரோசிரியர் ஜி. திருக்குமரன் சிரேஷ்ட பேராசிரியராக,
-
மருத்துவ பீடம் – சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணரும் சத்திரசிகிச்சையியல் துறைத் தலைவருமான பாலசிங்கம் பாலகோபி சிறுநீரகவியலில் பேராசிரியராகவும், சத்திரசிகிச்சை நிபுணர் சுந்தரமூர்த்தி ஐயர் துரைசாமி சர்மாசத்திரசிகிச்சையியலில் பேராசிரியராகவும், உடற்கூற்றியல் துறைத் தலைவர் கலாநிதி துரைரட்ணம் செந்தூரன்உடற்கூற்றியலில் பேராசிரியராகவும்,
-
கலைப்பீடம் – புவியியல் துறைத் தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா புவியியலில் பேராசிரியராகவும்,
-
இந்து கற்கைகள் பீடம் – சமஸ்கிருதத் துறைத் தலைவர் கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா சமஸ்கிருதத்தில் பேராசிரியராகவும்,
-
இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடம் – விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவர் கலாநிதி சிவநேசன் சபா ஆனந் உடற்கல்வியியலில் பேராசிரியராகவும்,
பதவி உயர்வு பெற்றுள்ளனர்.