தங்கத்தின் விலைகள் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் திடீரென இன்று (செப்.24) பாரியளவில் அதிகரித்துள்ளன.
இதற்கிணங்க இன்றைய தினத்தில் 24 கரட் தங்கம் மூவாயிரம் ரூபாவால்அதிகரித்துள்ளது. சந்தையின் தற்போதைய விலையின் பிரகாரம் 24 கரட் தங்கப்பவுண் ஒன்று 302,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 கரட்தங்கம் பவுண் ஒன்று 279,300 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,913 ரூபாவாகவும், விற்பனைசெய்யப்படுகிறது