நீதிமன்றம் சென்று ஹாட்லிக் கல்லுாரியை வென்ற வேம்படி மகளிர் கல்லூரி!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

பிள்ளைகளுக்கு நீதியை நேர்மையை நடுநிலையை போதிக்க வேண்டியஅதிகாரிகள் தங்கள் சுயநலனுக்காக ஏதும் அறியாத பிள்ளைகளின்திறமைகளில் விளையாடிய கல்வி உயர் அதிகாரிகளுக்கு தக்க பாடத்தைபுகட்டியுள்ளது.

மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சியில் பக்கசார்பாக நடந்துகொண்டமை தொடர்பாக வடக்கு மாகாண உயர் நீதிமன்றத்தால் வடக்கு மாகாணகல்வித் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு எதிராக தீர்ப்புவழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு செலவினை செலுத்த வேண்டும் எனவும்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டியில் சங்கீத போட்டியில் வேம்படி மகளீர்கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் ஹார்ட்லி கல்லூரிமுதல் இடத்தினை பெற்றுக்கொண்டதாகவும் நடுவர் குழுவினால்அறிவிக்கப்பட்டது. எனினும் சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டபடி ஹார்ட்லி கல்லூரிமாணவர்கள் பாடிய பாடலில் பதவர்ணம் காணப்படாததால் குறித்த போட்டியில்இருந்து அவர்களை தகுதி நீக்கம் செய்து தமக்கு முதல் இடம் தரப்படல் வேண்டும்என்று வேம்படி மகளீர் கல்லூரி அதிபரால் மாகாணக் கல்வித்திணைக்களத்திற்கு மேன்முறையீடு செய்யப்பட்டது எனினும் போட்டிமேன்முறையீட்டு சபை தலைவர் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்லாவண்யா மற்றும் தமிழ் பாட பிரதிக் கல்விப் பணிப்பாளர் கவிதா மற்றும்அப்போதைய மாகாணக் கல்விப் பணிப்பாளர் பிரட்லீ ஆகியோரால் குறித்தமேன்முறையீடு எவ்வித நடுநிலையான விசாரணைகளும் இன்றிநிராகரிக்கப்பட்டது. ( ஹார்ட்லி கல்லூரி சார்பாக பங்குபற்றிய அணியில் வடக்குமாகாணக் கல்வித்திணைக்களத்தில் கடமை புரியும் இரண்டு பிரதிக் கல்விப்பணிப்பாளர்களின் பிள்ளைகள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரின்பிள்ளை பங்கு பற்றியமையால் தான் இவ்வாறான பக்கச் சார்பான தீர்மானம்மேற்கொள்ளப் பட்டதா என சந்தேகம் உள்ளது )

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரினால் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.

வழக்கு விசாரணை தொடங்கிய நாள் முதலே தமது பிழைகளை மறைக்க பலமுயற்சிகளை மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர். எனினும் சட்டத்தரணிகள் வாதத்தால் நீதிமன்றம் மாகாணக் கல்வி அதிகாரிகள்லாவண்யா மற்றும் கவிதா ஆகியோரது செயற்பாடுகள் பக்கசார்பாககாணப்படுவதாக தனது தீர்ப்பில் கூறியதுடன் இனிவரும் காலங்களில் மாணவர்சார்பாக நடைபெறும் எந்த போட்டி நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பணியாற்ற கூடாதுஎனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்ததுடன் வழக்கு செலவு யாவும்இவர்களால் செலுத்தப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே மேற்படி விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து எதிர்வரும்காலங்களில் மாணவர்கள் போட்டிகளில் பக்கசார்பான தீர்மானங்களைமேற்கொள்வது தடைசெய்வதற்கான பொறிமுறை ஏற்படுத்தப்படல் வேண்டும்மேலும் நீதி மன்றத்தால் தண்டனை பெற்ற அதிகாரிகளுக்கு எதிராக அரசநிர்வாக விதிகளுக்கு அமைய தண்டனை வழங்கப்படல் வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றமை சுட்டிக்காட்டித்தக்கது.

Share this Article