கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறிஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார்கைது செய்துள்ளனர்.
கைதடி பகுதியில் நேற்று (செப்20) வீதி சோதனை நடவடிக்கையில் பொலிஸார்ஈடுபட்டிருந்தவேளை அங்கு பயணித்த சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்திசோதனையிட்டுள்ளனர்.
இதன்போது மரக்குற்றிகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தைசந்தேகநபர் தம்வசம் வைத்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சிறிய ரக லொறியை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று சோதனையிட்ட போது, பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளைசட்டவிரோதமாக கடத்த முற்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளைமுன்னெடுத்து வருகின்றனர்.