திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீற்றர் தூரத்தில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (செப் 18) மாலை 4.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
மேலும், நாட்டின் நான்கு நிலநடுக்க கண்காணிப்பு நிலையங்களிலும் இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிலையங்கள் மஹகனதராவ, ஹக்மான, பல்லேகல மற்றும் புத்தங்கல பகுதிகளில் அமைந்துள்ளன.