யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையின் ஒருபகுதி அண்மையில் இடிந்து விழுந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம்சிறீதரன் அவர்கள் பார்வையிட்டார்

தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனைஅழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக வருகைதந்த அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்
ஜமுனா ஏரி
மந்திரிமனை
சங்கிலியன் முகப்பு
என்பன யாழ்ப்பாண மண்ணின் தமிழர் வரலாற்றின் முக்கியத்துவம் மிக்கபகுதிகள் எனவும் அவற்றை தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டினார்
நாடாளுமன்ற உறுப்பினருடன் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் தொல்லியல்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பந்துல ஜீவ புனர்நிர்மாணஉத்தியோகத்தர் கபிலன் நல்லூர் யாழ்ப்பாண வலயத்தின் உத்தியோகத்தர்மணிமாறன் கனியவள அளவையியலாளர் அமர்நாத் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர்உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.