2024 ஆம் ஆண்டில் போதைப்பொருட்கள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில்228,000 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் தரவுகள்குறிப்பிட்டுள்ளன.
இந்த கைது நடவடிக்கையை 2023 ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 41 சதவீத அதிகரித்துள்ளன.
கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் இரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட ஐஸ்போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை 161 சதவீதம் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், 68,132 சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தசம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
2024 ஆம் ஆண்டில் 832.3 கிலோ ஹெரோயின், 8,359 கிலோ கஞ்சா மற்றும்1,364 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் இரசாயனத்தால் தயாரிக்கப்பட்டஐஸ் போதைப்பொருட்கள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.