நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட 7 இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வரை விளக்கமறியல்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், நாளை (செப். 16) வரை விளக்கமறியலில் வைக்கப்படுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஒகஸ்ட் 13ஆம் திகதி நெடுந்தீவு அருகே குறித்த 7 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இன்று (செப். 17) அவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் நளினி சுபாஸ்கரன், அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Share this Article