மீனவருக்கான ஓய்வூதிய திட்டம் நவம்பர் 21 முதல் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்செய்யப்படவுள்ளது. இத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமெனகடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

அதேவேளை, நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் கூட்டுத்தாபனம் தற்போதுஇலாபமீட்டி வருவதால் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை மூட வேண்டியஅவசியம் கிடையாது என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தை நாம், பொறுப்பேற்கும்போது கடற்றொழில் கூட்டுத்தாபனம் 1700 மில்லியன் ரூபாகடனை எதிர்கொண்டிருந்தது.

மீன் வர்த்தகர்களுக்கு 700 மில்லியன் ரூபாவை கூட்டுத்தாபனம் செலுத்தவேண்டியுள்ளது. ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியும் முறையாகசெலுத்தப்படவில்லை.

கூட்டுத்தாபனம் எதிர்கொண்டிருந்த கடன் மற்றும் நிதி நெருக்கடிகளைமுறையாக முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளைமேற்கொண்டோம். இதற்கமைய கூட்டுத்தாபனம் கடந்த ஜூலை மாதம் 3 மில்லியன் ரூபா, ஆகஸ்ட் மாதம் 10 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில்வருமானத்தை பெற்று வருகிறது.நெருக்கடிகளுக்கு முறையாக தீர்வு காணும்பின்னணியில்தான், கூட்டுத்தாபனத்தை மூடுவதற்கு அரசாங்கம்தீர்மானித்துள்ளதாக ஒரு தரப்பினர் போலியான செய்தியை பரப்பியுள்ளார்கள். கூட்டுத்தாபனத்தை மூட வேண்டிய அவசியம் தற்போது கிடையாது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டுமீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share this Article