பாதாள உலக குழுக்களுக்கு உதவிய இராணுவ அதிகாரி அதிரடி கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

​இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் ‘கொமாண்டோ சலிந்தா‘வுக்கு ரி-56 ரகதுப்பாக்கி ரவைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லெப்டினன்ட்கேர்னல் ஒருவர் கட‌த்த வியாழக்கிழமை (செப். 11) கைது செய்யப்பட்டுள்ளார்.

​சந்தேகநபர் மல்லாவி பாலிசகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாககடமையாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.

​சந்தேகநபர், இரண்டு தனித்தனி கொடுக்கல் வாங்கல்களில் 200 மற்றும் 60 எனமொத்தம் 260 ரி-56 துப்பாக்கி ரவைகளை சுமார் 650,000 ரூபாவிற்குவிற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

​இந்த குறிப்பிட்ட இராணுவ அதிகாரி 2017 ஆம் ஆண்டு கொமாண்டோபடைப்பிரிவு மையத்தில் கடமையாற்றியிருந்ததாகவும், அந்த காலப்பகுதியில்தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் பாதாள உலகதலைவர்களில் ஒருவரான ‘கொமாண்டோ சலிந்தா’ அவரது கட்டளையின் கீழ்பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article