விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறினார் மகிந்த!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மனைவி ஷிரந்த ராஜபக்ஷவுடன்கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்துஇன்று வியாழக்கிழமை (செப். 11) வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன்இல்லத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்தமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

“போகச் சொன்னார்கள் போகின்றோம். ஆனால், அரசியலில் இருந்துபோகமாட்டோம். அனுர செய்தது சரி, நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம்” என தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம்நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இதன்படி, உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்அந்த இல்லங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.  இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன  மற்றும்சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் ஏற்கனவே தங்களுடையஇல்லங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தற்போது விஜேராமஅரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article