போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கைகளை – பிரதமர்

SUB EDITOR
SUB EDITOR
3 Min Read

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக கடுமையானநடவடிக்கைகளை மேற்கொள்வோம்.மக்களுக்கு வழங்கியவாக்குறுதிக்கமைவாகவே செயற்படுவோம். போதைப்பொருள் ஒழிப்புக்கு உரியகடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தொடர்புடைய தரப்பினருக்குமுழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.குற்றச்சாட்டுக்களைமுன்வைப்பவர்களை கவனத்திற் கொள்ள போவதில்லை என பிரதமர் கலாநிதிஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (செப். 09) நடைபெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பானவிவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சபையில் உரையாற்றுகையில்அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் அரச அதிகாரிகள் அச்சமடைந்துள்ளார்என்று குறிப்பிட்டதை கேட்டு பிரஜை என்ற அடிப்படையில் கவலையடைகிறேன்.

அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளின் அரசியலுக்கு அடிபணிந்து அவர்களின்தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவதா சுயாதீன அரச சேவைஎன்பது. எதிர்கட்சியினர் இந்த கலாசாரத்தையா ஆதரிக்கிறார்கள். சிரேஸ்டஅரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களின் கருத்து முறையற்றது.

அரச சேவையை பலப்படுத்தியுள்ளோம். அரச சேவை மக்களுக்குவினைத்திறனானதாக அமைய வேண்டும். சிறந்த அரசியல் கட்டமைப்பைகட்டியெழுப்ப உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அரசசேவையில் பலர் சிறந்த முறையில் செயற்படுகிறார்கள்.

பழைய அரசியல் கலாசாரத்துக்கு அமைய செயற்படும் அரச அதிகாரிகளுக்குஎதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.அதனை தடுக்க முடியாது. முறையற்றசெயற்பாடுகளுக்கு துணைபோகும் எதிர்க்கட்சியின் ஏழ்மையான அரசியல்கருத்துக்கள் கவலைக்குரியன.

அரச சேவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தை இந்த நாட்டு மக்கள் நன்குவிளங்கிக் கொண்டுள்ளார்கள்.எதிர்கட்சியினர் எதனையும் விளங்கிக்கொள்ளாமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல,அரச சேவையில்சிறந்த மறுமலர்ச்சி தோற்றம் பெற்றுள்ளது.

முறையற்ற வகையில் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதனை எவ்வாறு தவறு என்று குறிப்பிடுவதுஇவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாகவே நாட்டை கட்டியெழுப்பமுடியும்.தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அரச சேவையை செயற்படுத்தமுடியாது.

பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் பற்றி பாராளுமன்றத்தில்பலவிடயங்கள் பேசப்பட்டன.இவர்கள் பாராளுமன்றத்தில் இருக்காமல் பொலிஸ்விசாரணைகளுக்கு சென்றிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது. கொள்கலன்கள் இங்கிருந்து வந்தது. இங்கு சென்றது என குறிப்பிடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் ஏதும் அறிவிக்கவில்லை.இந்த விடயத்தில்மனதில் தோன்றியதை குறிப்பிட முடியாது..

போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிரக்கட்சியினர் பொறுப்பற்ற வகையில்பேசுகிறார்கள். பொதுமக்கள் மத்தியில் செல்கையில் போதைப்பொருள் பற்றியேபெற்றோர் எம்மிடம் குறிப்பிடுகிறார்கள்.

போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை மக்களுக்காகவேமுன்னெடுத்துள்ளோம். எதற்காக பாராளுமன்றத்துக்கு வந்துள்ளோம்.மக்கள்தம்மை ஏன் தெரிவு செய்தார்கள் என்பதை மறந்து விட்டு எதிர்க்கட்சியினர்செயற்படுகிறார்கள்.

போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளைமேற்கொள்வோம்.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவேசெயற்படுவோம். போதைப்பொருள் ஒழிப்புக்கு உரிய கடும் நடவடிக்கைகளைமேற்கொள்வதற்கு தொடர்புடைய தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்புவழங்குவோம்.குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களை கவனத்திற் கொள்ளபோவதில்லை. என்றார்.

Share this Article