நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (செப். 09) பிற்பகல் 1.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலைவேளையில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றுமற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல்திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Share this Article