தபால் திணைக்களத்துடன் இணைந்து , இலங்கை வங்கி அனலைதீவில் தனதுசேவையை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த முயற்சியின் மூலம், இலங்கை வங்கியின் வாடிக்கையாளர்கள் அனலைதீவு தபால் அலுவலகம் ஊடாக வைப்புக்கள், மீளப்பெறல்களை மேற்கொள்ள முடியும் என்பதுடன் பொதுமக்கள் நிதி சார் சேவை வழங்கல்பட்டியல் கட்டணம் செலுத்துதல், கடன் தவணைக் கட்டணங்கள் செலுத்துதல்போன்றவற்றையும் மேற்கொள்ள முடியும் என தெரியவருகின்றது.

நேற்றையதினம் (செப். 03) அனலைதீவு தபாலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக இலங்கை வங்கியின் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வட பிராந்திய பிரதி தபால்மா அதிபர் திருமதி நிவேதிகா கேதீசன் மற்றும் தபால் திணைக்கள அதிகாரிகள், இலங்கை வங்கி அதிகாரிகள் , அனலைதீவு தபாலக ஊழியர்கள் , வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.