2025/2026 வட கீழ்ப் பருவக்காற்று தொடர்பான நீண்ட கால முன்னறிவிப்பு – நாகமுத்து பிரதீபராஜா-

SUB EDITOR
SUB EDITOR
5 Min Read

03.09.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி வானிலை அவதானிப்பு அறிக்கை..

2025 ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம்மூன்றாவது வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று மழை சராசரியை அண்மித்ததாகவேகாணப்படும்.  குறிப்பாக 500 மி.மீ. முதல் 600 மி. மீ. இற்கு  இடைப்பட்டஅளவிலேயே மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாண்டு 5க்கு மேற்பட்ட தாழமுக்க நிகழ்வுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள்காணப்படுகின்றன.  குறிப்பாக,

1. ஒக்டோபர் மாதத்தின்  இறுதி வாரத்தில் ஒரு தாழமுக்கமும்

2. நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் ஒரு தாழமுக்கமும்

3. நவம்பர் மாதத்தின்  இறுதியில் ஒரு தாழமுக்கமும்

4. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு தாழக்கமும்

5. நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஒரு தாழமுக்கமும்தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இதில் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் தோன்றும்தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்களாகவோ அல்லது புயல்களாகவோமாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அதேபோன்று டிசம்பர் மாதத்தில் தோன்றுகின்ற தாழமுக்கமும் தீவிரமானதாழமுக்கமாக அல்லது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகளைகொண்டிருக்கின்றது.

இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் சராசரியை அண்மித்த அல்லதுஅதற்கு சற்றுக் கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் கூடபெருமளவுக்கு மழை நாட்கள் செறிவான மழைவீழ்ச்சியைக் கொண்டதாகவேஅமைந்திருக்கும்.  இதனால் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புகள்இம்முறையும் காணப்படுகிறது.

நவம்பர் மாதம் ஐந்தாம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குஇடையிடையில் இவ்வாண்டின் வடகீழ்ப் பருவக்காற்று மழையின்  60 வீதமானமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

ஒக்டோபர் மாதம் 20 ம் திகதிக்கு பின்னர் வடகீழ்ப் பருவக்காற்று மழைபடிப்படியாக தீவிரம் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனவே  விவசாயிகளை பொறுத்த வரையில் தங்களுடைய காலபோக நெற்செய்கைக்கான புழுதி விதைப்பின் ஆரம்ப கட்ட வேலைகளை ஒக்டோபர்மாதத்தின் முதற் பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம். சேற்று விதைப்பைமேற்கொள்பவர்கள் ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்துஆரம்பிக்கலாம்.

செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரையில் எங்களுக்கு வடகீழ்ப் பருவக்காற்றுமழையை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டியமாதமாகும்.  குறிப்பாக செப்டம்பர் இறுதிக்குள் அல்லது ஒக்டோபர் மாதத்தின்முதல் வாரத்திற்குள்  எங்களுடைய காணிகளில்  காணப்படுகின்ற மரங்களின்விதானங்களின் அளவுகளை குறைத்து, அந்த மரங்கள் கடும் காற்றினால்அல்லது கடும் மழையினால் வீழ்ந்து உயிராபத்துக்களை ஏற்படுத்துவதை அல்லதுசொத்திழப்புக்களை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளைநாங்கள் மேற்கொள்ள வேண்டும்.  அத்தோடு எமது வாழிடங்கள் மற்றும்பணியிடங்களுக்கு அண்மித்திருக்கும் பட்ட மரங்கள் தொடர்பிலும் நாம் கவனம்செலுத்தி அவற்றை உரிய காலத்தில் அகற்றுவதன் மூலம் நாம் எமதுபாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்தோடு எங்களுடைய பிரதேசங்களில் காணப்படுகின்ற இயற்கையானஅல்லது செயற்கையான வடிகால்கள் செப்டெம்பர் மாத இறுதிக்குள் துப்புரவாக்கவேண்டும். இதன் மூலம் கிடைக்க இருக்கின்ற வடகீழ்ப் பருவமழை காரணமாகஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தங்களை தடுக்கும் வகையில் அந்த கால்வாய்கள்வெள்ள நீர் வழிந்தோடக்கூடிய வகையில் துப்புரவாக்குதல்  வேண்டும்.

அத்தோடு இக்காலப் பகுதியில் எங்களுடைய பிரதேசங்களில் காணப்படுகின்றபள்ளமான அல்லது மழை நீர் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடியஇடங்களை அடையாளப்படுத்தி குறியீடுகளை ( சிவப்புக் கொடி கட்டுதல் அல்லதுஆபத்தான பிரதேசம் என அடையாளப்படுத்தக் கூடிய ஏனைய வழிமுறைகள்)  அமைக்க வேண்டும். இதனூடாக கன மழைக்காலத்தில் சிறுவர்கள் அல்லதுஏனையோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும்.

எங்களுடைய பிரதேசங்களில் வருடம் தோறும் இந்த வடகீழ்ப் பருவக்காற்று காலபகுதியில் அதிகளவிலான வளர்ப்பு கால்நடைகள் இறப்பதற்கான நிலைமைகள்காணப்படுகின்றன.  எனவே அவற்றின் இறப்பைத்  தடுக்கும் வகையில்அவற்றிற்கான பாதுகாப்பான தங்குமிடங்களை முற்கூட்டியே ஏற்பாடு செய்வதன்ஊடாக அல்லது அவற்றுக்கு ஏற்படக்கூடிய நோய்களையும் நாங்கள் தவிர்த்துக்கொள்ள முடியும்.

பாடசாலை மாணவர்களுக்கு கனமழை மற்றும் வெள்ளக் காலங்களில் நாம்எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வினை உரிய தரப்புக்கள்ஏற்படுத்துவதன் மூலம் சில உயிரிழப்புக்களை தவிர்க்கலாம்.

வழமை போன்று இம்முறையும் வடகீழ்ப் பருவக்காற்று காலப்பகுதியில் இடிமின்னல் நிகழ்வுகளுக்கு வாய்ப்பிருப்பதனால் மக்கள் அது தொடர்பாகவிழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.  மழை நாட்களில் மழைக்காக எக்காரணம்கொண்டும் மரங்களின் கீழ் ஒதுங்குவதனைத் தவிர்த்துக் கொள்ளுதல்வேண்டும்.

பொதுவாக விவசாயிகளை பொறுத்த வரையிலும் காலபோக நெற்செய்கைக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் பொழுது இடிமின்னலோடு கூடியமழை நாட்களிலும் அவர்கள் தங்களுடைய நிலத்தை தயார்படுத்தும்வேலைகளில் ஈடுபடுவது வழமை.  இதன்போது  கிடைக்கின்ற இடியுடன் கூடியமழை அவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதுண்டு.  கடந்த 10 ஆண்டு காலதரவுகளின் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒவ்வொருஆண்டும் வடகீழ்ப் பருவக்காற்று காலப் பகுதியில் 10 க்கு மேற்பட்ட இறப்புக்கள்இடி மின்னல் நிகழ்வுகள் மூலம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  எனவேவிவசாயிகளும் பொதுமக்களும் இடி மின்னல் நிகழ்வு தொடர்பில் அவதானமாகஇருப்பது அவசியமாகும்.

இது ஒரு நீண்ட காலம் முன்னறிவிப்பு என்பதனால் இதில் சில மாற்றங்கள்நிகழலாம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

அதேவேளை  தற்பொழுது வடக்கு, வடமேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்ததாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது.  இதன் காரணமாக வடக்கு மற்றும்கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று முதல்( 03.09.2025) எதிர்வரும் 07.09.2025 வரை அவ்வப்போதும் மிதமான மழை கிடைப்பதற்குவாய்ப்புகள் உள்ளன.

Share this Article