யாழ் மாவட்ட உள்ளூராட்சி பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகம் அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனப் பெண்கள் வலையமைப்பிற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இக்குழுவின் பொதுக்கூட்டம் நேற்று (ஒகஸ்ட் 28) காலை யாழ் கிரீன் கிராஸ் விருந்தினர் மண்டபத்தில், சம்மேளனத்தின் மூத்த நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் பிரதீப் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

யாழ் மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

இதன்படி,

  • தலைவராக – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்த்

  • உப தலைவராக – யாழ் மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா

  • செயலாளராக – நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கௌசலா சிவா

  • உப செயலாளர்களாக – சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்கள் பௌலினா சுபோதினி மற்றும் தயாளராசா

  • பொருளாளராக – வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தன் துவாரகாதேவி

தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Share this Article