Wolverhampton பல்கலைக்கழக அழைப்பு கடிதம்: ரணில் மீது உள்ள குற்றச்சாட்டு பொய்யென ஐ.தே.கூ விளக்கம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு, இங்கிலாந்தின் Wolverhampton பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் John Raftery அவர்களால் 2023 செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவிற்கும் சிறப்பு விருந்தினருக்கான மதிய உணவிற்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அழைப்புக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு இன்று (ஒகஸ்ட் 22) வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தவில்லை என்பதையும், அவர்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதையும் அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், அரச நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், ரணில் விக்ரமசிங்க இன்று (ஒகஸ்ட் 22)  கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அழைப்பு கடிதத்தைப் பார்வையிட 👉uk

Share this Article