கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின்ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும்வகையில் கடந்த 3 ஆம் திகதி சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கானகருமபீடம் ஒன்றும் நிறுவப்பட்டது.
இதற்கு முன்னர், வெளிநாட்டினர் சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெறவேரஹேரவில் உள்ள மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகத்திற்கு செல்லவேண்டியிருந்தது.
இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையானகாலப்பகுதியில் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 ஆம் திகதி அதிகளவான சாரதி அனுமதிப் பத்திரங்கள்விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு 2,000 ரூபாய் என்றகுறைந்த கட்டணத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில்இலங்கை சுற்றுலா சாரதிகளின் ஒன்றியம் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.
குறித்த நடைமுறை காரணமாக, அந்த தொழிலை நம்பியிருப்போர் பாரியஅசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதிநிதி அமிலகோரலகே குறிப்பிட்டுள்ளார்.