தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்புமூன்றாவது நாளாக இன்றும் (ஓகஸ்ட் 21) தொடர்வதாக தபால் மற்றும்தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சருடன் முறையான கலந்துரையாடலை கோரி இந்த பணிப்புறக்கணிப்புமுன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வரவு நேர பதிவுக்காக கைரேகை இயந்திரம் நிராகரிக்கப்பட்டதாகவெளியான குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி தபால்மாஅதிபர் சமீஷா டி சில்வா, கைரேகை இயந்திரத்தை செயல்படுத்துவதேதொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்புக்கான காரணம் என தெரிவித்தார்.