பொலிஸ்மா அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் – குவியும் முறைப்பாடுகள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
July 10, 2020, Brazil. In this photo illustration the WhatsApp logo seen displayed on a smartphone

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்காகபொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால்அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த ஐந்துநாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, 071- 8598888 என்றவட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் முறையிட முடியும் என ஆகஸ்ட் 13 ஆம் திகதிபொதுமக்களுக்கு அறிவித்திருந்தார்.

அதன்படி, ஆகஸ்ட் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையானகாலப்பகுதிக்குள் குறித்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகபொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share this Article