மீனவர் ஓய்வூதியத் திட்டம் மீண்டும் ஆரம்பம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மீனவர் ஓய்வூதியத் திட்டம் அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கஎதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

இதற்காக பொருத்தமான நபர்களை அடையாளம் காணுவதற்காக தற்போதுஅறிவுறுத்தப்பட்டு வருவதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சிதெரிவித்தார்.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும்இணைந்து இந்த நடவடிக்கையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளன.

ஏற்கனவே உள்ள மீனவர் ஓய்வூதியத் திட்டம் செயலிழக்கச் செய்யப்பட்டபோது, சுமார் 60,000 மீனவர்கள் இதன் மூலம் பலன்களைப் பெற்று வந்ததாக தலைவர்கூறினார்.

அதன்படி, இந்த மீனவர் ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும்போது, அந்தஎண்ணிக்கையை விட அதிகமான மீனவர்களுக்கு பலன்களை வழங்கநடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின்தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி மேலும் தெரிவித்தார்

Share this Article