புங்குடுதீவு இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புங்குடுதீவு மக்கள் மற்றும் சிவில்சமூக அமைப்புகள் இணைந்து

இன்றையதினம் (ஓகஸ்ட் 15) படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரைஅற்புதராசா(அகிலன்) இன்  உடலத்தினை வைத்தே கவனயீர்ப்பு போராட்டம்ஒன்றை மேற்கொண்டனர்.

புங்குடுதீவு கந்தசாமி ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுத்த கொடியை பறக்கவிட்டு, பதாகைகளைஏந்தி கோஷமிட்டவாறு போராடினர்.

கடந்த ஓகஸ்ட் 10 அன்று தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசா(அகிலன்) அவர்களின் கொலைக்குநீதிவேண்டியும் ஒரு கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரியும்இந்த போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது.

இதனால் புங்குடுதீவு – யாழ்பாணம் இடையலான தனியார் பேருந்த போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

Share this Article