புங்குடுதீவு பகுதியில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறை செயற்பாடுகள் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றதை கண்டித்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும், பணிபுறக்கணிப்பு செய்யற்பாடும் இன்று (ஓகஸ்ட் 15) காலை 8.00 மணிக்கு புங்குடுதீவு கந்தசாமி கோவில் சந்தியில் நடைபெறவுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 10 அன்று தனது வீட்டில் இருந்தவேளை படுகொலை செய்யப்பட்டஐயாத்துரை அற்புதராசா(அகிலன்) அவர்களின் கொலைக்கு நீதி வேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைது செய்யக்கோரியும் யாழ்பாணத்துக்கான தனியார் போக்குவரத்து சேவைகளை தாம் மேற்கொள்ளமாட்டோம் என புங்குடுதீவு தனியார் பேருந்துச்சேவைச் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.