புங்குடுதீவைச் சேர்ந்த அகிலன் என்பவர் கடந்த 10 ந் தேதி இரவு 7 மணியளவில் கொடூரமான முறையில் மூவர் அடங்கிய கும்பலினால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது மிகவும் கொடூரமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும் என தீவக விருட்சம் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கையில்..
நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைசம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் சாதாரணமாக 2 கடற்படை முகாம்களைத்தாண்டி யாழ் நகர் நோக்கி சென்று இருக்கின்றார்கள் இச்சம்பவத்தை நோக்கும்போது தீவகப் பிரதேசங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துஇருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிவிக்கின்றது கடந்த காலங்களில்
ஒப்பீட்டளவில் மற்றைய பிரதேசங்களை விட தீவகத்தில் ஓரளவுகுற்றச்செயல்கள் குறைவாக இருந்தது.
குறிப்பாக கடல்சூழ்ந்த ஒரு நிலமான நமது தீவகத்தில் வெளியிலிருந்துவன்செயல்கள் உள்வருவதனை தவிர்ப்பதுடன் உள்ளிருந்தும்சிறுபிள்ளைத்தனமான வன்முறைகளும் வன்முறையாளர்களும் உருவாகிவளர்வதை இங்கு வாழக்கூடிய மக்கள் அனுமதிக்காது விழிப்புடன் அவதானிக்கவேண்டியது அவசியமாகின்றது.
கல்வி வளர்ச்சிக்காகவும் குடிநீர் தேவைக்காகவும் பசுமை வளர்ச்சிக்காகவும்பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் சிந்தித்துக் கொண்டிருக்கும்இந்த சூழ்நிலையில் இம்மாதிரியான சம்பவங்களால் மலிவாகிப்போன மனிதஉயிர்களின் பாதுகாப்புக்கருதி சிந்திக்க வேண்டியிருப்பது மிகவும் கவலைக்குரியவிடயம்.
தீவகத்தின் எல்லைக்குள் வன்முறைகளும் குற்றச்செயல்களும் இடம்பெறாமல்இருக்க ஊருக்குள் ஒற்றுமை
ஊர்கள் கடந்தும் ஒற்றுமையாக சிந்தித்து செயற்படுவது தேவையாகவுள்ளது.
அன்பான தீவக உறவுகளே
எமது அயல்களில் இருக்கக்கூடிய ஓரிரு விசமிகளை குற்றவாளிகளைஇனங்கண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதன் மூலமும் சட்ட நடவடிக்கைக்குஒத்துழைப்பதன் மூலமும் இனிவரும் நாட்களில் இன்னொரு அவலம் நிகழாமல்பார்ப்போம். மிகவும் விழிப்புடன் இருங்கள் அழகான அமைதியான தீவகத்தினைவருங்கால சந்ததிக்கு வழங்குவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.