வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் -அர்ச்சுனா எம். பி. தகவல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலை அரசாங்கத்திற்கு நடத்த முடியாமல்போகும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள்சக்தியின் தலைமையில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கூட்டுநம்பிக்கையில்லா பிரேரணை நேற்று (ஓகஸ்ட் 12) சபாநாயகர் ஜகத்விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சென்றிருந்த அர்ச்சுனா ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவர் வடக்கு அரசியல் தொடர்பில் கேட்டகேள்விக்கு பதிலளிக்கும் போதே பல காரணங்களை சுட்டிக்காட்டி இவ்வாறுதெரிவித்தார்

அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலிலே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின்தலைவரின் உருவச்சிலையை நிறுவுவதாகவும் தலைவரின் அம்மாவின் பெயரில்இறங்குதுறை அமைப்பதாகவும் வாக்குறுதி அளித்தது.

வாக்குகளை பெற்றுக் கொள்வே அரசாங்கம் இவ்வாறான பொய்களை கூறியதாகமக்களுக்கு தெரியும்.

அது மட்டுமல்ல அமைச்சர் ஒருவர் வடக்கில் காலணியை கழற்றி விட்டு ஓடியசம்பவம் ஒன்று அண்மையில் நடந்தது.

இவை வரலாற்றில் நடைபெறாத ஒன்றாகும்.அரசாங்கம் இவ்வாறு பொய்வாக்குறுதிகளை வழங்கினால் தெற்கிலும் மாகாண சபை தேர்தலை நடத்தமுடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்

Share this Article