கிழக்கு ஆசியாவில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பலநாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைநடைபெறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரி துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல நாடுகளைச்சேர்ந்த சுமார் 50,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய ஐந்து சைபர் குற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூகஊடகங்கள் மூலம் போலி வேலை விளம்பரங்கள் பரப்பப்படுவதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களில், இத்தகைய மோசடி மையங்களுக்கு 11 இலங்கையர்கள்ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் வசிப்பவர்களுக்கு அப்பால், டுபாயில் பணிபுரியும்இலங்கையர்களும் ஐரி வேலை வாய்ப்புகள் என்ற போர்வையில்இம்மையங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில்வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும்விளம்பரங்களுக்கு பதிலளிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறுபாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.