முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (ஓகஸ்ட் 10) விசேட உரையாற்ற உள்ளார்.
இளைஞர் சமூகங்கள் எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியைப் பற்றி அவர் இவ்வுரையில் தனது கருத்துகளை பகிரவுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை நிறுவுவதில் முன்னோடியான ரணில் விக்ரமசிங்க, அதன் ஆரம்ப நோக்கங்கள், மேலும் தனது பதவிக்காலத்தில் அந்த மன்றமும் இளைஞர் சங்கங்களும் மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்து நினைவூட்டவுள்ளார்.