2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (ஒகஸ்ட் 10) நாடு முழுவதும் நடைபெறுகிறது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி, நேற்று (ஒகஸ்ட் 09) காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதை அறிவித்தார். பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும்.
மாணவர்கள் காலை 8.30 மணிக்குள் தங்களது பரீட்சை நிலையங்களை அடைய வேண்டும் என்றும், காலை 9.00 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலில் இரண்டாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். இது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி 10.45 மணிக்கு முடிவடையும். பின்னர் அரைமணி நேர இடைவேளைக்குப் பிறகு, காலை 11.15 மணிக்கு முதலாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும்.
முதலாம் பகுதி ஒரு மணி நேரம் நீடித்து, மதியம் 12.15 மணிக்கு நிறைவடையும். பரீட்சை நடைபெறும் நேரத்தில் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற துரித இலக்கிற்கு அழைத்து தகவல் தெரிவிக்கலாம். இதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.