புங்குடுதீவு கடற்கரையில் ஆட்கள் இல்லாத மீன்பிடி படகு ஒன்று நேற்று (ஒகஸ்ட் 09) இரவு 7.00 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
படகின் உள்ளே மீன்பிடி வலைகளுடன், ஆட்கள் இன்றி கரையடைந்ததை அடுத்து, சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த படகைச் சுற்றிய விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.