குற்றப்புலனாய்வுப் பிரிவினரை பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வினர்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பருத்திதுறையில் காணாமல் போன தனிநபர்கள் குறித்து விசாரிக்கச் சென்றகுற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின்உறுப்பினர்கள் பின்தொடர்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறைநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் காணாமல்போன தொடர்புடைய ஒரு விஷயத்தை விசாரிக்கதங்கள் துறைஅதிகாரிகள் சென்றபோது  இரண்டு மோட்டார் சைக்கிள்களில்நான்கு நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததாகவும் இவர்களை நிறுத்திசோதனை செய்ததில் அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்பதுஉறுதி செய்யப்பட்டதாகவும்.

அதனடிப்படையில் பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வு அதிகாரிகளிடம்விசாரணை செய்தபோது குற்ற புலனாய்வு பிரிவினரை பின்தொடருமாறுகடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கமாண்டர் உத்தரவு பிறப்பித்ததாகஅவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளனர்

Share this Article