அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கான அபராதம் அதிகரிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அதிவேக நெடுஞ்சாலைகளில் மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றருக்கும்அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்கள் செலுத்த வேண்டிய அபராதம்தொடர்பாக திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மணித்தியாலத்திற்கு 100 முதல் 120 கிலோமீற்றர் வரையானவேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 3,000 ரூபா அபராதமும், மணித்தியாலத்திற்கு 120 முதல் 130 கிலோமீற்றர் வரையான வேகத்தில்வாகனம் செலுத்துவோருக்கு 5,000 ரூபா அபராதமும் விதிக்கப்படவுள்ளதாகபொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

GovPay செயலி மூலம் அபராத தொகையைச் செலுத்துகின்ற போதிலும், நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் வாகனம்செலுத்துவோருக்கான திருத்தப்பட்ட அபராதக் கட்டணத்தின்படி, மணித்தியாலத்திற்கு 100 முதல் 120 கிலோமீற்றர் வரையான வேகத்தில்வாகனம் செலுத்துவோருக்கு 3,000 ரூபாய் அபராதமும், மணித்தியாலத்திற்கு120 முதல் 130 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வாகனம்செலுத்துவோருக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

அத்துடன், மணித்தியாலத்திற்கு 130 முதல் 140 கிலோமீற்றர் வரையானவேகத்தில் வாகனம் செலுத்துவோருக்கு 10,000 ரூபா அபராதமும், மணித்தியாலத்திற்கு 140 முதல் 150 கிலோமீற்றர் வரையான வேகத்தில்வாகனம் செலுத்துவோருக்கு 15,000 ரூபா அபராதமும் அறவிடப்படவுள்ளது.

இதேவேளை, மணித்தியாலத்திற்கு 150 கிலோமீற்றருக்கு அதிகவேகத்தில்வாகனம் செலுத்தப்படுமானால், நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைஎடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

Share this Article