ஆசன பட்டி சட்டம் அமுல் – பிமல் ரத்நாயக்க !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஆசன பட்டி சட்டத்தை எதிர்காலத்தில் கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

காலி மாவட்ட போக்குவரத்துக் குழுவில் பேசிய அவர், சட்டத்தைப் பின்பற்றாதபேருந்துகளின் உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறினார்.

அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“ஆண்டுக்கு 2,350 பேர் இறக்கின்றனர். மேலும் 6,000 பேர்படுகாயமடைகின்றனர்.

அதனால்தான் போக்குவரத்து அமைச்சு மூலம் 2025 மற்றும் 2026 ஆம்ஆண்டுகளுக்கான வீதி பாதுகாப்பு திட்டத்தை நாங்கள் முன்வைத்துள்ளோம்.

அதன் கீழ், ஆசன பட்டித் திட்டத்தை அமுல்படுத்தினோம். எப்படியிருந்தாலும், நாங்கள் வர்த்தமானியை வெளியிடுவோம்.

இது ஏற்கனவே 2011 முதல் அமுலில் உள்ளது. யாரும் இதனை மதிப்பதில்லை. ஆசன பட்டி அணியாமல் நெடுஞ்சாலையிலும் பயணிக்கின்றனர்.

பெரும்பாலான பேருந்துகளில் ஆசன பட்டி உள்ளது. எனவே, நாங்கள் நிச்சயமாகசட்டத்தை அமுல்படுத்துவோம், அதனை மதிக்காத பேருந்துகளின் உரிமங்களைஇரத்து செய்வோம்” என்றார்.

Share this Article