மக்களை காயப்படுத்த அரசியல்வாதிகள் உணர்வுகளை இலக்காகக் கொண்டனர் – அமைச்சர் சரோஜா சாவித்ரி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தமிழ் மக்களை பாதிக்க விரும்பினால் அவர்களது மொழியை, சிங்கள மக்களை பாதிக்க விரும்பினால் அவர்களது இனத்தை, முஸ்லிம் மக்களை பாதிக்க விரும்பினால் அவர்களது மதத்தை இலக்காகக் கொள்ள வேண்டும் என்பதை அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்திருந்ததாக மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பவல் ராஜ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (ஜூலை 09) உரையாற்றிய போது இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.

மேலும், “இலங்கையில் வாழும் மக்கள் பல்வேறு வகையான உணர்வுகளை கொண்டுள்ளனர். தமிழ் மக்கள் தங்கள் மொழியை, சிங்கள மக்கள் தங்கள் இனத்தை, முஸ்லிம் மக்கள் தங்கள் மதத்தை உணர்வுடன் எதிர்கொள்ளும் தன்மை உள்ளதாக எமது பேராசிரியர் யோகராஜா முன்பே கூறியுள்ளார். அரசியல்வாதிகள் இதையே தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர்,” என அவர் தெரிவித்தார்.

சாதாரண மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளாமல் இருந்ததாகவும், “எங்கள் மதம் தாக்கப்படும் போது, அந்த மதத்தை காப்பாற்ற எங்கள் மக்கள் பிரிந்து போராடினர். அதுபோலவே, இலக்கணப் பிழைகளுடன் பதாதைகள் வைக்கப்படும் போது அதை தவறுதலாகவே நினைத்தோம். ஆனால், அது திட்டமிட்டு செய்யப்படுவதாக பின்னர் புரிந்தது. அதனால் தான், மொழிக்குத் தேவையான இடம் வழங்கப்படாமல் போனதன் எதிரொலியாக, அதை காக்க போராடினோம்,” என அமைச்சர் சரோஜா சாவித்ரி பவல் ராஜ் கூறினார்.

Share this Article