ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கோ, போர்க்குற்றங்களுக்கோமுள்ளிவாய்க்காலை மட்டும் சாட்சியமாகக் கொள்ள முடியாது. ஆனால், இலங்கைசுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் 1948களிலிருந்து இன்றுவரைஈழத்தமிழர்கள் மீது பௌத்த மேலாதிக்கவாதிகளால் புரியப்பட்ட மிகமோசமானபடுகொலைகளுக்கான பிரதான சாட்சியமாக முள்ளிவாய்க்காலைப் போன்று, செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியை அடையாளப்படுத்தப்படுத்த முடியும்என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்அவர் மேலும் தெரிவித்ததாவது,
செம்மணி சித்துப்பாத்தி மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில்நேற்றுவரை 52 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழப்படும் பகுதிகளிலிருந்து மழைநீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டகால்வாய்களில் கூட மூன்று இடங்களில் என்புச் சிதிலங்கள் தென்பட்டுள்ளனஎன்றால் இனப்படுகொலைக்கான வலுவான சாட்சியமாக அந்த மனிதப்புதைகுழியை அடையாளப்படுத்த முடியும். ஆனால் எழுபது ஆண்டு காலமாகதமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி விசாரணையைசித்துப்பாத்தி மனிதப்புதைகுழியோடு நிறுத்திக்கொள்ள இந்த அரசாங்கமும்தன்னாலான பிரயத்தனங்களை முன்னெடுக்கக்கூடும் என்ற அடிப்படையில், இனஅழிப்புக்கான பொறுப்புக்கூறலும் பரிகார நீதியும் பரந்துபட்ட அளவில் அணுகப்படவேண்டும் என்பதில் நாமும், நீதியை நாடும் எல்லாத் தரப்புகளும் மிகுந்தஅவதானம் செலுத்த வேண்டும்.
உலகின் மனச்சாட்சியை உலுக்கும் உணர்வுசார்ந்த படுகொலை அடையாளமானசெம்மணி மனிதப் புதைகுழியோடு, மன்னார், கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வரம், மண்டைதீவு உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும்முறையான நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில்2009 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட போது, ஒரு இலட்சத்திற்கும்மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளதாக அப்போதையமன்னார் மறைமாவட்ட மறைந்த ஆயர் இராஜப்பு ஜோசப் அவர்கள் வழங்கியசாட்சியத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைகளுக்கான அடிப்படையாகசெம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் அணுகப்பட வேண்டும் – என்றார்.