இன்று (ஜூலை 07) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வாக்காளர் பதிவு விபரங்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் பட்டியல் பெறுதல் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுடனான இணைவழி சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் மறு அறிவித்தல் வெளியாகும் வரை செயலற்றதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.