மாகாண மரதன் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவில் இன்றையதினம்(ஜூலை 06) இடம்பெற்ற வட மாகாணபாடசாலைகளுக்கு இடையிலான அரைமரதன் ஒட்டப் போட்டியில் 16 வயதுப் பெண்கள் பிரிவில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவி எஸ்.டிலுக்‌ஷி , 2 ஆம் இடத்தனைப் பெற்று பாடசாலைக்கும் , தீவுக்கும் பெருமைசேர்த்துள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட 16 வயதுப் பெண்கள் பிரிவில் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவிகள் 1 ஆம் , 3 ஆம் இடங்களைவென்றுள்ளதுடன் ஆண்கள் பிரிவில் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவன் 1ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

இந்த வகையில் தீவக கல்வி வயத்திற்கும் தீவுக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை பாடசாலை மற்றும் தீவக சமூகம் பாரட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article