நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (ஜூன் 30) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்கஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால்அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும்.

இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால்அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.

மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாவால்அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாகும்.

Share this Article