க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு  எதிர்வரும்ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர்நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும்தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில்சமீப நாட்களாக பரவி வரும் பல்வேறு செய்திகள் தவறானவை என்றும் பரீட்சைதிணைக்களம் அறிவித்துள்ளது.

Share this Article