போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக 03 புதியமத்திய நிலையங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் அந்த மத்தியநிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுசபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார்.

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை வேகமாகஅதிகரித்து செல்வதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை அடையாளம்காண்பதற்காக நாடுமுழுவதும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பணிப்பாளர்நாயகம் குறிப்பிட்டார்.

இளைஞர்கள் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் தடுக்கவிழிப்புணர்வு திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

Share this Article