நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சாரணர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு நயினாதீவு மகா வித்தியாலயத்தில்   எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) திகதி மாலை 4.30 மணிக்குஇடம்பெறவுள்ளது.

நயினாதீவு மகா வித்தியாலயம் மற்றும் நயினாதீவு ஶ்ரீ கணேசா கனிஷ்ட மகாவித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த சாரணர்களுக்குமான சாரணர் சின்னம் சூட்டும் வைபவம் அதிபர்களின் தலைமையில்  நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை சாரணர் சங்கம் யாழ் மாவட்டகிளையின் மாவட்ட ஆணையாளர்  ம.பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக க. சிவகரன் பிரதேச செயலாளர் வேலணை பிரதேசசெயலகம்,  தி. ஞானசுந்தரன் வலயக்கல்வி பணிப்பாளர் தீவக வலயம், க. பரமலிங்கம் தலைவர் அறங்காவலர் சபை நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்மன் தேவஸ்தானம் ஆகியோர் கலந்துசிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article